டாப் 20 கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்திய வம்சாவளியினர்

Home

shadow

        டாப் 20 கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்திய வம்சாவளியினர் 

        2019ஆம் ஆண்டின் இங்கிலாந்து நாட்டின் டாப் 20 கோடீஸ்வரர்கள் பட்டியலை சண்டே டைம்ஸ் என்ற பத்திரிகை வெளியிட்டது.

         இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்துஜா குழும தலைவர்களான ஸ்ரீசந்த் மற்றும் கோபிசந்த் இந்துஜா முதல் இடத்தை பிடித்துள்ளனர். அவர்களின் மொத்த சொத்து மதிப்பு, 22 பில்லியன் பவுண்ட் ஆகும்.

         இவர்களுக்கு அடுத்து மும்பையில் பிறந்து இங்கிலாந்தில் தொழில் நடத்தும் டேவிட் மற்றும் சைமன் ரூபன் ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். மேலும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை தலைவர் அனில் அகர்வால் இந்த பட்டியலில் முதல் 20 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளார்.

          இதன் மூலம் இங்கிலாந்து தொழில்துறையில் இந்தியர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக வணிக பார்வையாளர்களால் கணிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான செய்திகள் :