டிட்லி புயல் ஒரிசா அருகே கரையைக் கடந்தது

Home

shadow

 

வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், ஒரிசா அருகே கரையைக் கடந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.


சென்னைக்கு அருகே மத்திய வங்கக் கடலின் மேற்கு பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் நேற்று முன்தினம் புயலாக உருவெடுத்தது.  டிட்லி எனப் பெயரிடப்பட்ட இந்த புயல் உருவாவதற்கு முன்னதாக தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. ஆனால் பின்னர் இந்த எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது. வங்க கடலில் உருவான இந்த புயல் வடக்கு நோக்கி நகர ஆரம்பித்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை  5.30 மணிளவில் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா இடையே கோபால்பூர் பகுதியில் டிட்லி புயல் கரையைக் கடந்தது. வானிலை ஆய்வு மையம் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தால், ஆந்திரா மற்றும் ஒரிசா மாநிலங்களில் கரையோரம் வசித்து வந்த 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். புயல் கரையை கடந்த பகுதியில் 165 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. ஒடிசாவின் 5 கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர். இன்று பிற்பகலில் புயல் வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :