டெம்பின் புயலுக்கு இதுவரை 183 பேர் உயிரிழப்பு

Home

shadow

ஆண்டுதோறும் சுமார் 20க்கும் மேற்பட்ட புயல்களால் பாதிக்கப்படும் பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியை நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த வெப்பமண்டல புயல் தாக்கியது. டெம்பின் என பெயரிடப்பட்ட இந்த புயல், மிண்டானாவ் தீவை புரட்டிப்போட்டது. மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்றுடன், கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்று வெள்ளத்தில் பல வீடுகள் அடித்து செல்லப்பட்டன. பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. தாழ்வான பகுதியில் வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த புயலுக்கு இதுவரை 183 பேர் உயிரிழந்துள்ளனர். டெல் நார்ட்டே மாகாணத்தில் உள்ள சிபுகோ சலுக் நகரங்களில் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. பலர் காணாமல் போயுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

இது தொடர்பான செய்திகள் :