தடையற்ற
வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து தென்அமெரிக்க நாடான பெருவுடன் இந்தியா
அடுத்த மாதம் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது.
இந்தியா-பெரு
இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பான மூன்றாவது சுற்றுப்
பேச்சுவார்த்தை கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அடுத்த மாதம்
பெரு தலைநகர் லிமாவில் 4
வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக
வர்த்தகத் துறை அமைச்சக அதிகாரிகள் பெரு செல்ல இருக்கின்றனர். பொருள்களை கொண்டு
வருவது, வர்த்தக சேவை அளிப்பது, முதலீடு,
தொழில் வல்லுநர்கள் பரிமாற்றம், வர்த்தக
பூசல்களுக்கு தீர்வுகாண்பது, தொழில்நுட்ப விஷயங்களை
சீராக்குவது குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தடையற்ற
வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டால், இரு நாடுகளிடையே வர்த்தகத்தில்
பல்வேறு வரிகள் நீக்கப்படும் அல்லது குறைக்கப்படும். இரு நாடுகள் இடையே வர்த்தகம்,
முதலீட்டு வாய்ப்புகள் வெகுவாக அதிகரிக்கும். பெருவுக்கு இந்தியா
அதிக அளவில் பொருள்களை ஏற்றுமதி செய்து வருகிறது. முக்கியமாக, கார் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள், இரும்பு
பொருள்கள், பருத்தி ஆகியவற்றை நமது நாட்டில் இருந்து அதிகம்
இறக்குமதி செய்கிறது.