தீ விபத்தில் சேதமடைந்த அர்ஜென்டினாவின் பனிக்கட்டிகளை உடைக்கும் கப்பல், தற்போது சரி செய்யப்பட்டு மீண்டும் அன்டர்டிகாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Home

shadow

அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, சிலி, இங்கிலாந்து, பிரான்ஸ், நார்வே மற்றும் நியூசிலாந்து ஆகிய ஏழு நாடுகளும் அண்டார்டிகா கண்டத்துக்கு உரிமை கொண்டாடினர். ஆனால் 1961ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி இந்த பிரச்னை ஒத்திவைக்கப்பட்டது. அண்டார்டிக்  கண்டம் மீதான தனது ஆளுமையை நிரூபிக்கும் வண்ணம் அர்ஜென்டினா அரசு அங்கு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அண்டார்டிக் கண்டத்தில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள அர்ஜென்டினா அரசு 13 நிலையங்கள் அமைத்துள்ளது. இந்தப் பகுதிகளில் பனிக்கட்டிகளை உடைக்கும் பணியில் அர்ஜெண்டினாவைச் சேர்ந்த அல்மிரன்டே இரிசார் என்ற கப்பல் ஈடுபட்டிருந்தது. இந்தக் கப்பல் 2007 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் பலத்த சேதமடைந்தது. அதனைத் தொடர்ந்து கப்பலை பழுது பார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்தக் கப்பல் சரிசெய்யப்பட்டு மீண்டும் அண்டார்டிகாவில் உள்ள ஆராய்ச்சி நிலையத்துக்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :