தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து – 7 குழந்தைகள் உட்பட 30 பேர் பலி

Home

shadow                 இந்தோனேஷியாவில் தீப்பெட்டி தொழிற்சாலை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 பேர் பலியாகினர்.
 இந்தோனேஷியாவின் வடக்கு சுமந்திராவில் உள்ள பின்ஜின் நகரில் தீப்பெட்டி தொழிற்சாலை ஓன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை கிடங்கில் இன்று காலை ஒரு பகுதியில் ஏற்பட்ட தீயானது தொழிற்சாலை முழுவதும் மளமளவென பரவியது.
 இந்த தீ விபத்தில் சிக்கி 7 குழந்தைகள் உட்பட 30 பேர் பலியாகினர். உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 கடந்த 2017ஆம் ஆண்டு ஜகர்தாவில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் நேரிட்ட தீ விபத்தில் 47 பேர் பலியாகினர்.

இது தொடர்பான செய்திகள் :