தெற்கு சூடான் அமைதி குழு தலைவர்களின் காலில் முத்தமிட்ட போப் பிரான்சிஸ்

Home

shadow

                           தெற்கு சூடானில் நிலவி வரும் அசாதரண நிலையை முடிவுக்கு கொண்டு வரக்கோரி அந்நாட்டு அமைதி குழு தலைவர்களின் காலில் போப் பிரான்சிஸ் முத்தமிட்டது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


2011-ஆம் ஆண்டு உருவான தெற்கு சூடான் நாட்டில் ஆளும் கட்சி எதிர்கட்சி இடையேயான மோதல் காரணமாக கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தெற்கு சூடானில் நிலவும் அசாதரண சூழ்நிலையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி பேச்சுவார்த்தைக்கு போப் பிரான்ஸிஸ் ஏற்பாடு செய்திருந்தார். இதில் தெற்கு சூடானின் அதிபர் சல்வா கிர், எதிர்க்கட்சி தலைவர்ம் துணை அதிபருமான ரெயிக் மாச்சார் மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய போப் பிரான்சிஸ், அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மூவரிடமும் அமைதியை நிலைநாட்டும் படி கேட்டுக்கொள்கிறேன் எனவும், பிரச்னைகள் தீர்ந்துவிடும், அமைதியை நிலைநாட்டும் பணியை மேற்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்தார். இந்த கூட்டத்தின் போது, தெற்கு சூடானில் அமைதியை வலியுறுத்தி அந்நாட்டு அமைதி குழு தலைவர்களின் காலில் போப் பிரான்சிஸ் முத்தமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்த காட்சிகள் தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகின்றன.

இது தொடர்பான செய்திகள் :