தெற்கு பாகிஸ்தானில் 400- க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு

Home

shadow

              தெற்கு பாகிஸ்தானில் 400- க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு 

           தெற்கு பாகிஸ்தானில் 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 500 பேருக்கும் மேல் எச்ஐவி பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


        பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் உள்ள லர்கனாவின் வஸாயோ கிராமத்தை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பெரியவர்களுக்கு எச்ஐவி பாதிப்பு உள்ளது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

       இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட போது தவறான உபகரணங்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட ஊசியை மீண்டும் பயன்படுத்தியதால் தொற்று பரவியது தெரியவந்துள்ளது.

        கடந்த 2 வாரங்களில் 500க்கும் மேற்பட்டோர் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட இந்த விவகாரத்தில் அந்த பகுதியில் க்ளினிக் வைத்துள்ள குழந்தைகள் மருத்துவரான முசபர் கங்கர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

       அவரும் எச்ஐவி நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ள நிலையில் வேண்டுமென்றே அவர் நோய் தொற்றை பரப்பினாரா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

 

இது தொடர்பான செய்திகள் :