தேசிய அறிவியல் மாநாடு தள்ளிவைப்பு

Home

shadow

உலகெங்கும் உள்ள அறிவியலாளர்கள் சங்கமிக்கும் இந்திய அறிவியல் மாநாடு ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். 105--ம் ஆண்டு அறிவியல் மாநாடு வரும் ஜனவரி 3-ம் தேதி தொடங்கி 7 -ம் தேதி தெலங்கானா மாநிலம் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவிருந்த இந்த மாநாடு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் ஒருவரின் தற்கொலையால் மாணவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களால், தேசிய அறிவியல் மாநாட்டை நடத்த இயலாத சூழல் நிலவுவதாக உஸ்மானியா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதனை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது. மாநாட்டை வேறு இடத்தில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 100 ஆண்டு பாரம்பரியம் கொண்ட தேசிய அறிவியல் மாநாடு, முதன்முறையாக தள்ளிவைக்கப்பட்டிருப்பது தேசிய அறிவியல் கழகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இது தொடர்பான செய்திகள் :