தேர்தலுக்கு பிறகு வட கொரிய அதிபா் கிம் ஜாங் உனைச் சந்திக்கவிருப்பதாக அதிபா் டிரம்ப் தெரிவித்துள்ளார்

Home

shadow

 

அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தோ்தலுக்குப் பிறகு, வட கொரிய அதிபா் கிம் ஜாங் உனைச் சந்திக்கவிருப்பதாக அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளை வட கொரியா கடந்த ஆண்டின் இறுதிவரை தொடா்ந்து நடத்தி வந்தது.இதனை அடுத்து அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பிறகும்  வட கொரியா அதிபர் கிம் ஜாங் உனிற்கும்  சிங்கப்பூரில் நடந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த சந்திப்பில் பல திருப்பங்கள் ஏற்பட்டது. அந்த சந்திப்பில் வட கொரியா முழுமையான அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாக உறுதியளித்ததை தொடர்ந்து கொரிய தீபகற்பத்தில் அமைதி திரும்பியது வட மற்றும் தென் கொரியா தலைவர்கள்  இடையே நடந்த சந்திப்பும் அதை உறுதி படுத்தியது.இந்நிலையில் டிரம்பிணை தான் மீண்டும் சந்திக்க விரும்புவதாக வட கொரியா அதிபர் தெரிவித்திருந்த நிலையில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்தல் முடிந்த பிறகு நிச்சயம்கிம் ஜாங் உனைச் சந்திக்கவிருப்பதாக உறுதியளித்துள்ளார். தங்களது இரண்டாவது சந்திப்புக்கான இடத்தைத் தோ்வு செய்யும் பணி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது என்றும் தற்போது 3 அல்லது 4 இடங்கள் பரிசீலனையில் உள்ளன என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.பெரும்பாலும், தங்களது சந்திப்பு அமெரிக்காவில் நடைபெறுவதற்கு  வாய்ப்புள்ளது என்றும்  வட கொரியாவில் கூட  சந்திக்கலாம் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :