நியு காலிடோனியா - சுனாமி எச்சரிக்கை

Home

shadow

  

       தெற்கு பசிபிக்கின் நியு காலிடோனியாவில் கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் 7.6 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நியு காலிடோனியாவின் லாயல்டி தீவுகளுக்கு 155 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து பூகம்ப மையத்திலிருந்து சுமார் 1000 கிலோ மீட்டருக்குள்ளான பகுதிகளில் கடும் சுனாமிப் பேரலைகள் தாக்க வாய்ப்பிருப்பதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து லாயல்டி தீவுகள் மற்றும் நியு காலிடோனியாவில் கடலோரத்தில் இருக்கும் மக்களை உடனடியாக பாதுகாப்பு இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுனாமி அலைகள் 5 நிமிடத்திலிருந்து 1 மணி நேரத்துக்குள் கடற்கரையைத் தாக்கும் எனவும் அலைகள் சுமார் 3 மீட்டர் உயரம் வரை எழும்பும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :