நியூசிலாந்து நாட்டில் இரு வேறு மசூதிகளில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் உயிரிழப்பு

Home

shadow

நியூசிலாந்து நாட்டில் இரு வேறு மசூதிகளில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து நாட்டின் மத்திய கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரு வேறு மசூதிகளில் நேற்று காலை தொழுகை நடைபெறும் நேரத்தில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 49 பேர்  உயிரிழந்ததாக நியூசிலாந்து காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக 4 பேரை நியூசிலாந்து காவல் துறை கைது செய்துள்ளது. நியூசிலாந்தின் வரலாற்றில் இது கருப்பு தினம் என தெரிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதலும், இரங்கலும் தெரிவித்துள்ளார். முன்னதாக, துப்பாக்கிச் சூடு நடைபெற்ற மசூதிக்கு சென்ற வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள், துப்பாக்கிச் சூடு நடைபெறுவதற்கு முன்னதாக அங்கிருந்து வெளியேறியதால் நூலிழையில் உயிர் தப்பினர். மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து நியூசிலாந்துவங்கதேசம் இடையேயான கிரிக்கெட் போட்டியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்நாட்டு பிரதமருக்கு அவர் எழுதியுள்  கடிதத்தில், 'துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேந் எனவும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் தெரிவித்துள்ளார் மேலும் அனைத்து விதத்திலும் பயங்கரவாதத்தை வெளிப்படுத்துபவர்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்கிறது. என தான் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பல்வேறு நாட்டு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :