நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பிரெக்சிட் திட்டமிட்டபடி அமல்படுத்தப்படும் - பிரிட்டன் பிரதமர் தெரசா மே

Home

shadow

                       நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பிரெக்சிட் திட்டமிட்டபடி அமல்படுத்தப்படும் என பிரிட்டன் பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார்.


இந்த ஆண்டு மார்ச் மாதம் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், பிரெக்சிட் இறுதி ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகாமல் உள்ளது. இதனால் பிரெக்சிட்டை செயல்படுத்துவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அயர்லாந்து எல்லை விவாகரத்தில் சுமூக தீர்வு ஏற்படாத நிலையில், அது குறித்து ஐரோப்பிய யூனியன் தலைவர்களை சந்தித்து பிரிட்டன் பிரதமர் தெரசா மே நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் பிரெக்சிட் நிச்சயம் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார். ஆனால் தெரசா மேவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்வுக்கான எந்த சாத்தியக்கூறும் தென்படவில்லை என ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :