நீயூசிலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50ஆக உயர்வு: 5 இந்தியர்களும் அதில் உயிரிழந்துள்ளதாக இந்திய தூதரகம் தகவல்

Home

shadow

நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் உயிரிழந்தவர்களில் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. இதில்  5 இந்தியர்களும்  உயிரிழந்துள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.  

நியூசிலாந்து  நாட்டில் கிறிஸ்ட்சர்ச் மசூதிகளில் நடத்தப்பட்ட   துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. இச்சம்பவத்தில் 9 இந்தியர்கள் காணவில்லை என்று தெரிவித்துள்ள இந்திய தூதரகம் அவர்களைக் குறித்த தகவல்களை தெரிவிக்குமாறு நியூசிலாந்து அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அவர்களின் குடும்பத்தினருடனும் ஆலோசனைகள் மேற்கொண்டு வருவதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் பட்டியலில் குறைந்தது 7 இந்தியர்கள் இருக்கலாம் என தூதரக அதிகாரிகள் கருதுகின்றனர். இவர்கள் மசூதிக்குச் செல்லும் முன்பு, தங்கள் குடும்பத்தினரிடம் பேசியதாகவும் பின்னர் தொடர்பு கொள்ளவில்லை என்றும் அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஐதராபாத்தை சேர்ந்த 31 வயதான பஹராஜ் ஹசன் என்பவர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். தெலுங்கானா கரீம் நகரைச் சேர்ந்த முகமது இம்ரான் கான் என்பவரும் உயிரிழந்துவிட்டதாக அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அரிப் வோரா மற்றும் அவரது மகன் ரமீஸ் வேரா, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹபீஸ் முசா படேல், நவஸ்ரீயைச் சேர்ந்த மற்றொரு வம்சாவளி இந்தியர் ஆகிய நான்கு பேர் உயிரிழந்ததாக அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதேபோன்று கேரள மாநிலம் கொடுங்கலூர் பகுதியைச் சேர்ந்த ஆன்சி அலி பாவா என்ற 27 வயதான இளம் பெண்ணும் மசூதியில் தமது கணவருடன் தொழுகை நடத்தச் சென்றபோது உயிரிழந்தார். ஆயினும் அவர் கணவர் உயிர்தப்பிவிட்டார் என கூறப்படுகிறது

 

 

இது தொடர்பான செய்திகள் :