நெட்டிசன்களிடம் வசமாய் மாட்டிய பாகிஸ்தான் பிரதமர்

Home

shadow


                    புகழ்பெற்ற கவிஞர் ரவிந்திரநாத் தாகூரின் மேற்கோளை ட்விட்டரில் குறிப்பிட்டு அதற்கு லெபனான் கவிஞர் கலில் கிப்ரானின் பெயரை பயன்படுத்தியதால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை நெட்டிசன்கள், கடுமையாக விமர்சித்து கிண்டல் செய்து வருகின்றனர்.

தமது அதிகாரப்பூர்வமான டிவிட்டர் கணக்கில் வாழ்க்கையை ஊக்கப்படுத்தும் வரிகளை மேற்கோளிட்டு, இம்ரான் கான் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். அதில், இரவு தூங்கும்போது வாழ்க்கை மகிழ்ச்சியானது என கனவு கண்டேன் எனவும், ஆனால், விழித்துப் பார்த்த போது வாழ்க்கை ஒரு சேவை என்பதை புரிந்துக் கொண்டு, சேவையே மகிழ்ச்சி என்பதை நான் உணர்ந்து கொண்டதாகவும் பதிவிடப்பட்டிருந்தது. மேலும், யாரேனும் ஞானத்தை புரிந்துக் கொண்டு, மன நிறைவுடன் வாழ வேண்டும் என்றால் அவர்களுக்கு கிப்ரானின் வார்த்தைகள் வழி வகுக்கும் என்றும் இம்ரான் கான் பதிவிட்டிருந்தார். ஆனால், அந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் கலில் கிப்ரான் அல்ல ரவிந்திரநாத் தாகூர் என நெட்டிசன்கள் இம்ரான் கானை கிண்டல் செய்து வருகின்றனர்.

ஒரு நாட்டின் பிரதமர் ஒருகருத்தை பதிவிடும்முன் அதன் உண்மைத்தன்மையை ஆராயாமல் இப்படி சொதப்பலாமா? என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பான செய்திகள் :