நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் டிராம் வண்டியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழப்பு

Home

shadow

நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் டிராம் வண்டியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்த நிலையில் 3 பேர் உயிரிழந்தனர்.

நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் வேலைக்கு செல்ல டிராம் வாகனத்தில் பலர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, டிராம் வண்டிக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். அதன்பின் அங்கிருந்து தப்பிச்சென்றார். இந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர். இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 9 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், அவர்களில் 3 பேர் நிலைமை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும்  உட்ரிச் நகர மேயர் ஜான் வான் ஜனேன் தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பான செய்திகள் :