நேபாளத்தில் கனமழை, நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு

Home

shadow

               நேபாளத்தில் கனமழை, நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு

              நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேபாளத்தில் கடந்த வியாழக்கிழமை, முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்குள்ள 25 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக அப்பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. மேலும் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.

தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 30 பேர் காணாமல் போனதாக, அம்மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் நேபாள காவல்துறை மற்றும் ராணுவத்தினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி, வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக 25 மாவட்டங்களில் இருந்து 1,146 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான செய்திகள் :