பசுமை குடில் வாயுக்களின் அளவை குறைக்கவில்லை என்றால் பருவ நிலை மாற்றத்தால் பேரழிவு ஏற்படும் - ஐநா வானிலை எச்சரிக்கை

Home

shadow

                       பருவ நிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடு போலந்து நாட்டில் நடைபெற்று வரும் நிலையில், வளிமண்டலத்தில் உள்ள கிரீன்ஹவுஸ் வாயுக்களின் அளவு அதிகரித்துக்கொண்டே இருப்பதாகவும், அவை குறைவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை எனவும் கூறியுள்ளது.

பருவநிலை மாற்றத்துக்கு காரணமான பசுமை குடில் வாயுக்களின் அளவு முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக ஐநா வின் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மூன்று மில்லியன் வருடங்களுக்கு முன் இது போன்று CARBON DIOXIDE அதிகம் இருந்தததாகவும் அப்போது  பூமியின் வெப்பம் தற்போதைய வெப்பத்தை விட மூன்று டிகிரி செல்சியஸ் அளவு அதிகமாக இருந்ததாகவும், கடல் மட்டம் இருபது மீட்டர் அளவு வரை உயர்வாக இருந்ததாகவும் World Meteorological Organization இன் பொது செயலாளர் Petteri Taalas தெரிவித்துள்ளார். Carbon di oxide உட்பட பசுமை குடில் வாயுக்களின் அளவை குறைக்கவில்லை என்றால் பருவ நிலை மாற்றத்தால் பேரழிவு ஏற்படும் எனவும் உலக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பான செய்திகள் :