பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் - இந்தியா – அமெரிக்கா கூட்டாக வலியுறுத்தல்

Home

shadow

பயங்கரவாத குழுக்களை ஒடுக்குவதற்கு பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா-அமெரிக்கா கூட்டாக வலியுறுத்தின.

 இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் விஜய் கோகலே மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பேயோ ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்.  இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் ஆதரவளிக்கும் எந்தவொரு நாடும் அதற்கு பொறுப்பாக்கப்பட வேண்டும் என்று கோகலே-மைக் பேச்சுவார்த்தையின்போது வலியுறுத்தப்பட்டதாகவும் புல்வாமா தாக்குதலை அடுத்து இந்தியாவுக்கு அமெரிக்கா அளித்த ஆதரவுக்காக அந்நாட்டுக்கும், மைக் பாம்பேயோவுக்கும் இந்தியாவின் சார்பில் விஜய் கோகலே நன்றி தெரிவித்ததாகவும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பான இந்தியாவின் கவலையை புரிந்துகொள்வதாக மைக் பாம்பேயோ கூறியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாத குழுக்களை ஒடுக்க பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும், அந்நாடு தனது மண்ணில் பயங்கரவாத குழுக்களுக்கு புகலிடம் அளிக்கக் கூடாது எனவும் விஜய் கோகலே-மைக் பாம்பேயோ கூட்டாக வலியுறுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :