பயங்கரவாதம் மனித குலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் – ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

Home

shadow

             பயங்கரவாதம் மனித குலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் – ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

             பயங்கரவாதம் மனித குலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று ஜி20 மாநாடில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஜி20 உச்சி மாநாடு ஜப்பான் ஒசாகா நகரில் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது.  இதில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, மாநாட்டிற்கு இடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அமெரிக்க பொருள்களின் மீதான இறக்குமதி வரியை இந்தியா கட்டாயம் குறைக்க வேண்டுமென டிரம்ப் எச்சரித்த நிலையில், இது தொடர்பாக இருவருக்கும் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றதாக தெரிகிறது. இது தவிர ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி, 5ஜி சேவை, தொழில்நுட்பம் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.

அதன் பின்னர், ஒசாகா நகரில் பிரிக்ஸ் நாட்டு தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதம் மனித குலத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று கூறினார். பயங்கரவாதத்தால் அப்பாவி மனித உயிர்கள் பலியாவதோடு, பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும்,  உலக வர்த்தக அமைப்பை வலுப்படுத்துதல், ஆற்றல் பாதுகாப்பை உறுதி செய்தல், உலக பொருளாதார வீழ்ச்சி, போட்டித்தன்மை உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் பிரதமர் மோடி பேசினார்.

இது தொடர்பான செய்திகள் :