பயங்கரவாதி ஹபீஸ் சயீத்துடன் பாகிஸ்தானுக்கான பாலஸ்தீன தூதர் சந்திப்பு தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

Home

shadow

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரித்த அமெரிக்காவின் முடிவிற்கு எதிராக ஐ.நா.வில் இந்தியா உள்ளிட்ட 128 நாடுகள் வாக்களித்தன. அதற்கு நன்றி தெரிவிக்க வேண்டிய பாலஸ்தீன அரசு, மாறாக இந்தியாவிற்கு எதிரான செயல்பாட்டை தொடர்ந்துள்ளது. மும்பை தாக்குதலுக்கு காரணமான சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத் ராவல்பிண்டியில் நேற்று நடத்திய பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தானுக்கான பாலஸ்தீன் தூதர் வலீத் அபு அலி கலந்து கொண்டார். இது சமூக வலைதளங்களிலும் வெளியாகி உள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இது குறித்து டெல்லியில் உள்ள பாலஸ்தீன தூதர் மற்றும் பாலஸ்தீன அரசிடம் தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் ஐநா மற்றும் அரபு நாடுகள் கூட்டமைப்பில் பாலஸ்தீனம் இந்தியாவிற்கு எதிராகத்தான் வாக்களித்தது. அதனையும் மறந்து ஜெருசலேம் விவகாரத்தில் ஆதரவளித்தும், பாலஸ்தீனின் எதிர்மறை செயல்பாடு இரு நாட்டு நல்லுறவை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பான செய்திகள் :