பருவநிலை மாற்றத்தை தடுக்க வலியுறுத்தி 80 நாடுகளில் பேரணி: மாணவர்கள், பொதுமக்கள் திரளானோர் பங்கேற்பு

Home

shadow

பருவநிலை மாற்ற பாதிப்புகளை தடுக்க வலியுறுத்தி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணி நடத்தினர்.

இயற்கையை மறந்து மனிதன் தனது நலனை மட்டும் கருத்தில் கொண்டு செயல்பட்டு வந்ததால், இன்று புவி வெப்பமயமாதல், காற்று, நீர், நிலம் மாசுபாடு போன்றவற்றால் உலகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் புயல், வெப்பம், பனிப்பொழிவு, வெள்ளம் போன்றவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் பருவ நிலை மாற்றத்தினால் ஏற்பட்டு கொண்டிருக்கும் கடுமையான விளைவுகளை தவிர்க்க, அரசு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி, சுமார் 80 நாடுகளில் உள்ள ஆயிரம் நகரங்களில் நேற்று பள்ளிகளுக்கு செல்வதை தவிர்த்து, போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என மாணவர்களுக்கு  அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், வாஷிங்டன் ஆகிய பகுதிகளிலும், ஆஸ்திரேலியாவில் கான்பெர்ரா, மெல்போர்ன், சிட்னி ஆகிய பகுதிகளிலும், பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் அமைதியான முறையில் பள்ளி மாணவர்கள் போராட்டங்கள் நடத்தினர்.வெள்ளிக்கிழமைகள் வருங்காலத்திற்கான துவக்கம்எனும் இணையத்தளத்தின் மூலம் இந்த போராட்டம் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான செய்திகள் :