பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்

Home

shadow

                     அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசியதை அடுத்து, இந்தியாவுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு  அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தி உள்ளார்.

பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியதை அடுத்து, உடனே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை அதிபர் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, பதற்றத்தை தணிக்கும் நோக்கில்,  ஜம்மு- காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, இந்தியாவுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என  இம்ரான் கானுக்கு டிரம்ப் அறிவுரை கூறினார். முன்னதாக நேற்று பிரதமர் நரேந்திர மோடியும்,  அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் சுமார் 30 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினர். அப்போது இந்தியாவுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் கருத்துகளை, சில தலைவர்கள் வெளியிட்டு வருவது, பிராந்திய அமைதிக்கு உகந்ததல்ல என்று அதிபர் டிரம்ப்பிடம்  பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக் காட்டியிருந்தார்.  ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில், இந்திய அரசுக்கு எதிராக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடுமையான கருத்துகளை வெளியிட்டு வரும் நிலையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வன்முறையைத் தூண்டுவதாக பிரதமர் மோடி மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார். அதன் எதிரொலியாக அதிபர் டிரம்ப் இப்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது

இது தொடர்பான செய்திகள் :