பாகிஸ்தான் பிரதமருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடிதம்

Home

shadow

 

       ஆப்கன் அமைதி பேச்சுவார்த்தையில் இந்தியாவை தடுக்கும் வேலியாக தலிபான் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் பயன்படுத்துவதாக அமெரிக்க பாதுகாப்பு படை லெட்டினண்ட் ஜெனரல் கென்னத் மெக்கென்சி ஜூனியர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடிதம் எழுதிய விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஆயுதப்படை சேவை செனட் கமிட்டி முன்பாக விளக்கம் அளித்த லெட்டினண்ட் ஜெனரல் கென்னத் மெக்கென்சி ஜூனியர், ஆப்கான் அமைதி பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதிபர் டிரம்ப் கடிதம் மூலம் பாகிஸ்தான் பிரதமரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார். ஆப்கனில் நீண்ட காலம் அமைதி நிலவ, பாகிஸ்தானின் பங்கு மிக அவசியம் என தெரிவித்த அவர், ஆப்கன் அமைதி பேச்சுவார்த்தை விவகாரத்தில், தலிபான்களை பேச்சுவார்த்தைக்கு கொண்டு வர பாகிஸ்தான் முழு முயற்சியை எடுக்கவில்லை எனவும் கூறினார். மேலும், இந்த விவகாரத்தில் இந்தியாவை தடுப்பதற்கான வேலியாக தலிபான்களை பாகிஸ்தான் பயன்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பான செய்திகள் :