பாகிஸ்தான் ராணுவம் 780 முறை அத்துமீறி தாக்குதல்

Home

shadow

ரஜோரி மாவட்டத்தையொட்டி உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு மேஜர் உள்பட 4 வீரர்கள் உயிரிழந்தனர். எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில், இந்த ஆண்டில் பாகிஸ்தானால் நடத்தப்படும் 780-வது அத்துமீறிய தாக்குதல் இதுவாகும். இத்தகைய தாக்குதல் மூலம் பொதுமக்கள் 12 பேர் உள்பட 33 பேர் உயிரிழந்துள்ளனர். 2014-ம் ஆண்டு 153, 2015-ல் 152, 2016-ல் 228 என்ற எண்ணிக்கையில் நடைபெற்றிருந்த தாக்குதல் தற்போது 780 என்ற அளவில் உயர்ந்துள்ளது. தலைமைத் தளபதி பிபின் ராவத், ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் பஹத் ஆகியோர் இது குறித்து பாகிஸ்தான் ராணுவ தலைமையிடம் பல முறை எடுத்துக் கூறியுள்ளனர். ஆனாலும் தாக்குதல்கள் தொடர்வது, எல்லையில் பதற்ற சூழலை நீட்டித்து வருகிறது.

இது தொடர்பான செய்திகள் :