பாலஸ்தீன அதிபர் குற்றச்சாட்டு

Home

shadow

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலில் உள்ள அந்நாட்டின் தூதரகத்தை ஜெருசலம் நகருக்கு மாற்ற முடிவு செய்தார். இதன் மூலம் ஜெருசலமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிக்கிறது. அமெரிக்காவின் இந்த முடிவை எதிர்த்து ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடப்பதற்கு முன், அமெரிக்கா உலக நாடுகளை ஆதரவாக வாக்களிக்க கூடாது என அச்சுறுத்தியது. மேலும், ஐநாவுக்கு வழங்கும் நிதியையும் விலக்கிக்கொள்ளும் எனவும் எச்சரித்தது. அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் பாலஸ்தீனிய அதிபர் மஹ்மூத் அப்பாஸ். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சென்ற வாரம் செய்தியாளர்களிடம் பேசிய அப்பாஸ், இனி அந்நாடு மத்திய கிழக்கு ஆசியாவில் சாமாதான முயற்சிகள் மேற்கொள்ள நேர்மையான அமைதி தூதராக திகழ முடியாது என கூறினார்.

இது தொடர்பான செய்திகள் :