பிரதமர் மோடி ரஷ்யா பயணம்

Home

shadow


ரஷ்ய அதிபருடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் 21ஆம் தேதி ரஷ்யா செல்ல உள்ளார்.

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு வெளிநாட்டு உறவுகளை மேம்படுத்த பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். அண்மையில் சீனா சென்ற பிரதமர் மோடி, அதிபர் ஜீ ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சர்வதேச பிரச்சனைகள் மற்றும் இந்தியா-சீனா இடையிலான பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். கடந்த வாரம் நேபாளம் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் சர்மா ஒலியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

இந்நிலையில் ரஷ்ய அதிபருடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் 21ஆம் தேதி ரஷ்யா செல்ல உள்ளார். இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்டவற்றில் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக வெளியுறுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம், ரஷ்யா சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், அந்நாட்டு அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :