பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை

Home

shadow

          ஆப்கானிஸ்தான் விவகாரம், வர்த்தக பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.


உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டு இருக்கும் ஆப்கானிஸ்தானில் வளர்ச்சி பணிகளை தொடங்கும் நோக்கில் அங்கு நூலகம் அமைக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார். ஆனால் இதனை விமர்சித்து அதிபர் டிரம்ப் பேசியதற்கு மத்திய அரசு மட்டுமல்லாது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்திருந்தன. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் விவகாரம், வர்த்தக பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பு உறவை அதிகரிப்பது, வர்த்தக பற்றாக்குறையை குறைப்பது, இந்தோபசுபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை அதிகரிப்பது, ஆப்கானிஸ்தானில் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :