பிரான்சின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட பலத்த புயலை தொடர்ந்து அங்கு பல இடங்கள் வெள்ள ஆபாயம் எச்சரிக்கை

Home

shadow

 

     பிரான்சின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட பலத்த புயலை தொடர்ந்து அங்கு பல இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கபட்டுள்ளன.

பிரான்ஸ் நாட்டில் கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த கடும் வெப்பத்தை அடுத்து அங்கு பலத்த புயல் ஏற்பட்டது. இந்நிலையில் பிரான்ஸின்  மத்திய மற்றும் தெற்கு பகுதிங்களில் புயலின் காரணமாக வெள்ள  அபாய எச்சரிக்கை விடப்பட்டது. 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்  செயின்ட்-ஜூலியன்-டி-பெரோலாஸ் என்னும் இடத்திலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  வெளியேற்றப்பட்டனர். சுமார் ஆயிரத்து 600 பேர்  ட்ராம் மற்றும் கார்ட் போன்ற பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டு காட்சியளிக்கிறது. மேலும் சுமார் 17 ஆயிரம் வீடுகள் மின் ணைப்பு இன்றி இருளில் மூழ்கியுள்ளன. சுமார் 10 க்கும் மேற்பட்டவர்கள் சிறு காயங்கள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :