பிரான்சுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இந்திய சிறுவர்கள் 22 பேரை காணவில்லை.

Home

shadow

பஞ்சாப், ஹரியாணா மற்றும் டெல்லியைச் சேர்ந்த 13 வயதிலிருந்து 18 வயதுக்குட்பட்ட, 25 சிறுவர்கள் சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு அழைத்துசெல்லப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பாரிஸில் ரக்பி பயிற்சி அளிப்பதாகக் கூறி, பரிதாபாத் மற்றும் டெல்லியைச் சேர்ந்த மூன்று முகவர்கள், சிறுவர்களின் பெற்றோர்களிடம் இருந்து தலா 25 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு பிரான்சுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 25 பேரும் பாரிஸ் சென்று அங்கு ஒரு வார காலம் ரக்பி பயிற்சி முகாமில் பங்குபெற்றுள்ளனர். ஆனால், அதன் பின்னர் இவர்கள் இந்தியா திரும்புவதற்கான  விமானப் பயணச்சீட்டை முகவர்கள் ரத்து செய்ததாக சிபிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன. 25 சிறார்களில் 2 பேர் மட்டுமே, இந்தியாவுக்கு திரும்பி வந்துள்ளனர். மீதமுள்ள 23 பேர் பாரிஸில் உள்ள ஒரு குருத்வாராவில் விடப்பட்டதாகவும், அவர்களில் ஒருவரை சமீபத்தில் பிரான்ஸ் காவல் துறை கைது செய்ததாகவும் சிபிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்டர்போல் உதவியுடன் பிரான்ஸ் காவல் துறை சிபிஐ-யை தொடர்பு கொண்ட பின், சிபிஐ இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக சிறார்களின் பெற்றோர்களைத் விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளதாக சிபிஐ செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :