பிரான்ஸ் நாட்டில் உள்ள பிஸ்காரோஸ் நகரில் விமானங்களின் சாகச நிகழ்ச்சி

Home

shadow

       பிரான்ஸ் நாட்டில் உள்ள பிஸ்காரோஸ் நகரில் நடைபெற்ற பழைய விமானங்களின் சாகச நிகழ்ச்சி, பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது.

பிரான்ஸ் நாட்டின் தென் மேற்கு பகுதியில் உள்ள பிஸ்காரோஸ் நகரம், அந்நாட்டில் உள்ள கடல் விமான தளங்களுள் ஒன்றாக திகழ்கிறது. இந்நகரம் இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி நாட்டின் கடல் விமான தளமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பிஸ்காரோஸ் நகரத்தில் கடல் விமானங்கள் உட்பட பழைய புகழ்பெற்ற விமானங்களின் இரண்டு நாள் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், உலகின் மிகப்பெரிய கடல் விமானமாக கருதப்படும் பெரைவ் விமானம், பிரான்ஸ் விமானப்படையின் மரைன் ரபேல் விமானங்களும் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டன. 1970களில் உருவாக்கப்பட்ட ரஷ்யாவை சேர்ந்த யாக் 50 ரக விமானம், 1930ஆம் ஆண்டு அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்ட காட்டலினா கடல் விமானம், இரண்டாம் உலகப்போரில் உபயோகப்படுத்தப்பட்ட டக்லஸ் விமானம் ஆகியவை பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்தன. தண்ணீர் வெடிகுண்டு வீசுவதற்காக பயன்படுத்தப்படும் மிகப்பெரிய கடல் விமானமான பெரைவ்,  12 டன் தண்ணீரை எடுத்து செல்லும் ஆற்றல் உடையது. காட்டுத் தீ ஏற்படும் காலத்தில் அவற்றின் மேல் தண்ணீர் ஊற்றி அணைக்க இது பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

இது தொடர்பான செய்திகள் :