பிரெக்சிட் ஒப்பந்தம் இரண்டாவது முறையாக நடைபெற்ற வாக்கெடுப்பு தோல்வி

Home

shadow

                             பிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக நடைபெற்ற வாக்கெடுப்பு தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகும் நடவடிக்கையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.


ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகும் பிரெக்சிட் நடவடிக்கைகான காலக்கெடு வரும் 29-ஆம் தேதி முடிவடைய உள்ளது. இதனை முன்னிட்டு பிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ஒப்பந்தத்திற்கு எதிராக, 432 பேரும், ஆதரவாக, 202 பேரும் ஓட்டளித்தனர். இதையடுத்து, 'பிரெக்சிட்' ஒப்பந்தம் தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து பிரெக்சிட் ஒப்பந்தத்தில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரதமர் தெரசா மே பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இதனிடையே ஒப்பந்தம் இல்லா பிரெக்சிட் கொண்டு வரப்படும் எனவும் தெரசா மே தெரிவித்திருந்தார். ஆனால் இதற்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், பிரெக்சிட் ஒப்பந்தத்தில் மாற்றம் கொண்டு வர ஒப்புதல் கிடைத்துள்ளதாக தெரசா மே நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து நேற்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரெக்சிட் ஒப்பந்தம் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 391 பேர் எதிராகவும், 242 பேர் ஆதரவாகவும் வாக்களித்தனர். இதனால் பிரெக்சிட் விவகாரத்தில் இரண்டாவது முறையாக தெரசா மே தோல்வியை சந்தித்துள்ளார். மேலும்ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகும் நடவடிக்கையிலும் இழுபறி ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :