பிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக மீண்டும் வாக்கெடுப்புக்கு அனுமதி இல்லை: பிரிட்டன் நாடாளுமன்ற சபாநாயகர் அறிவிப்பு

Home

shadow

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் ஒப்பந்தம் மீது 3-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்த அனுமதி கிடையாது என சபாநாயகர் ஜான் பெர்கோவ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறும் நடவடிக்கை பிரெக்ஸிட்என அழைக்கப்படுகிறது. இதற்கான காலக்கெடு வருகிற 29-ந் தேதி முடிவடைகிறது.  ஆனால் திட்டமிட்டபடி பிரெக்ஸிட்வெற்றிகரமாக நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது. பிரெக்ஸிட்டுக்காக, ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தம்தான் இதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 15-ஆம்  தேதி இந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டபோது பெரும்பான்மையான எம்.பி.க்கள் அதனை நிராகரித்துவிட்டனர்.  அதேபோல், ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் இங்கிலாந்து எம்.பி.க்கள் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வலியுறுத்துகிறார்கள். ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்போ பிரெக்ஸிட்நடவடிக்கையில் புதிய ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு இல்லை என கைவிரித்துவிட்டது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட்ஒப்பந்தம் மீது 3-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்த அனுமதி கிடையாது என சபாநாயகர் ஜான் பெர்கோவ், அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.  இதுபற்றி அவர் கூறுகையில், நாடாளுமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதை தடுக்கவும், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட முடிவுக்கு உரிய மரியாதை அளிக்கவும் இந்த நடவடிக்கை அத்தியாவசியமாகி உள்ளது என தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :