புத்த மத தலைவரான தலாய் லாமாவுக்கு புற்றுநோய் பாதிப்பு

Home

shadow

  திபெத்திய புத்த மத தலைவரான தலாய் லாமா, புற்றுநோயால் பாதிக்கப்படுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

81 வயதான தலாய் லாமா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவருவதாக செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. புரொடேஸ்ட் கேன்சர் எனும் புற்றுநோயால் தலாய் லாமா பாதிக்கப்பட்டு இருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலாய் லாமா உடல் நிலை குறித்த தகவல்கள் இந்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் சீனாவுக்கு இதற்கு முன்னர் தலாய் லாமாவின் உடல் நிலை குறித்த தகவல்கள் அளிக்கப்படவில்லை எனவும், தற்போது இதன் மூலம் அவரது உடல் நிலை குறித்த தகவல் சீன அரசை சென்றடைந்து இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் திபெத்திய நிர்வாகம் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. தலாய் லாமா கவலை அளிக்க கூடிய வகையிலான எந்த நோயாலும் பாதிக்கப்படவில்லை எனவும், விரைவில் அவர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் திபெத்திய நிர்வாகம் தெரிவித்துள்ளது. திபெத் மீதான சீனப் படையெடுப்பின் போதுதனது ஆதரவாளர்களுடன் இந்தியாவுக்கு அடைக்கலமாக வந்த தலாய் லாமா, அன்று முதல் இந்தியாவின் தர்மசாலா பகுதியில் வசித்து வருகிறார்.

இது தொடர்பான செய்திகள் :