புத்தாண்டுச் செய்தியாக, அணு ஆயுதங்களை ஏவுவதற்கு எப்போதும் தயார் - வடகொரிய அதிபர் கிம் ஜாங்

Home

shadow

.நா. மற்றும் பல்வேறு நாடுகளின் எதிர்ப்பு, பொருளாதாரத் தடைகள் அனைத்தையும் மீறி அணு ஏவுகணை சோதனையை வட கொரியா தொடர்கிறது. வடகொரியாவின் ஏவுகணைத் தாக்குதல் எல்லைக்குள் அமெரிக்கா வந்து விட்டதாகவும், வடகொரியா  முழுமையாக அணு ஆயுத நாடு என்று பிரகடனப்படுத்துவதாகவும் அதிபர் கிம் ஜாங் உன் கடந்த மாதம் கூறியிருந்தார். இதனால் வெகுண்டெழுந்த அமெரிக்கா, போர் வந்தால், வடகொரியா முழுமையாக அழிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது. பல்வேறு பொருளாதாரத் தடைகள் மூலமாக ஐநாவின் ஒத்துழைப்புடன் வடகொரியாவைப் பணிய வைக்க முயன்று வருகிறது. ஆனால், இவற்றைப் பொருட்படுத்தாமல், தனது அதிரடி செயல்களால் கொரிய தீபகற்பத்தை எப்போதும் போர் பதற்ற சூழலில் வைத்துள்ள வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், புத்தாண்டுச் செய்தியிலும் அதிர்ச்சி அளித்துள்ளார். அணு ஏவுகணைத் தாக்குதலுக்கான பொத்தான் தனது மேஜையில் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். இது வெற்று மிரட்டல் அல்ல, உண்மை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிம் ஜாங் உன்னின் இந்த அறிக்கை, புத்தாண்டு தொடக்கத்திலேயே உலக நாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பான செய்திகள் :