போராட்டங்களில் ஈடுபட்டால் தண்டனை வழங்கும் புதிய சட்டம்

Home

shadow

1.

       அறிவிக்கப்படாத போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை வழங்கும் வகையில் புதிய சட்டத்தை கொண்டு வர உள்ளதாக பிரான்ஸ் பிரதமர் எட்வர்ட் பிலிப்பே தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் மஞ்சள் சட்டை போராட்டத்தால் அங்கு தொடர் பதற்றம் நிலவி வருகிறது. போராட்டத்தின் போது ஏற்படும் வன்முறை சம்பவங்களால் பொது சொத்துக்கள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் அறிவிக்கப்படாத போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை வழங்கும் வகையில் புதிய சட்டத்தை கொண்டு வர உள்ளதாக பிரான்ஸ் பிரதமர் எட்வர்ட் பிலிப்பே தெரிவித்துள்ளார். இந்த சட்டத்தின் படி பொது சொத்துக்களுக்கு சேதம் விளைப்போருக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :