போர் காரணமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் கடும் குளிர் நிலவுவதால் பெரும் துன்பமடைந்துள்ளனர்.

Home

shadow

சிரியாவில் உள்நாட்டு போர் காரணமாகவும் , ஐஎஸ் பயங்கரவாதிகளின் தாக்குதல் காரணமாகவும், டீர் எஸ்-ஸோர் போன்ற நகரங்களில் வாழ்ந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஐன் இஸ்ஸா முகாமில் சென்று தங்க ஆரம்பித்தனர். பயங்கரவாத தாக்குதல்களில் இருந்து தப்பியபோதிலும், குளிரின் தாக்குதல்களில் இருந்து இவர்களால் தப்ப இயலவில்லை. இவர்கள் தங்கியுள்ள ப்ளாஸ்டிக் கூடாரங்கள் குளிரைத் தாங்க ஏற்புடையதாக இல்லை. குளிரை எதிர்கொள்ள தேவையான உடைகளோ, போர்வைகளோ இவர்களிடம் இல்லை. ஐன் இஸ்ஸா முகாமில் உள்ள 2500 கூடாரங்களில் 17,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவ வசதிகளும் அங்கு இல்லை. இதனால் குழந்தைகள் உட்பட பலர் பாதிக்கப்பட்டு, உயிரிழக்க நேரிடுகிறது.

இது தொடர்பான செய்திகள் :