போர்க்குற்றம் தொடர்பான எத்தகைய விசாரணையையும் சந்திக்க தயார்: இலங்கை ராணுவ தளபதி மகேஷ் சேனநாயகா கருத்து

Home

shadow

இலங்கையில் விடுதலை புலிகளுடனான இறுதிப் போர் தொடர்பான எந்த ஒரு விசாரணைக்கும் தயார் என இலங்கை ராணுவ தளபதி மகேஷ் சேனநாயகா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு, விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்ட போரில் அப்பாவி தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது. இது தொடர்பாக இலங்கை மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  இலங்கை ராணுவ தளபதி மகேஷ் சேனநாயகா, தாங்கள் எத்தகைய விசாரணையையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும், அதற்கு நாங்கள் அச்சப்படவில்லை என்றும் தெரிவித்தார். தாங்கள் எவ்வித போர் குற்றமும் செய்யவில்லை என தெரிவித்த அவர், சர்வதேச விசாரணை தேவை இல்லை எனவும் கூறினார். அப்பாவி மக்கள் உயிரிழப்பு இல்லாமல் எந்த போரும் நடக்காது என தெரிவித்த அவர், தாங்கள் அப்பாவி மக்களை கொன்றோம் என்று அர்த்தம் அல் எனவும் கூறினார். பழைய விஷயங்களை தோண்ட வேண்டாம் எனவும் கடந்த 10 ஆண்டுகளில் தாங்கள் செய்த ஆக்கப்பூர்வ செயல்களை அனைவரும் கவனிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :