மக்களவைத் தேர்தல் - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்து

Home

shadow

                   மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிப் பெற்றால் இந்தியாபாகிஸ்தான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தைக்கு சிறப்பான வாய்ப்பு அமையும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.


செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய அவர், தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தால், காஷ்மீர் விவகாரத்தில், வலது சாரிகளின் எதிர்ப்பு காரணமாக, தீர்வு காண காங்கிரஸ் கட்சி தயங்கும் என தெரிவித்தார். அதே நேரம் பாரதிய ஜனதா தலைமையிலான அரசு அமைந்தால், காஷ்மீர் விவகாரம் உட்பட இந்தியாபாகிஸ்தான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தைக்கு சிறப்பான வாய்ப்பு அமையும் என  தெரிவித்தார். மேலும், பயம் மற்றும் தேசியவாத உணர்வை மையமாக வைத்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டு வருவதாகவும், இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் தற்போது அச்ச நிலையுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :