மசூத் அஸாருக்கு தடை விதிப்பது தொடர்பான விவகாரத்தில், விரைவில் தீர்வு காணப்படும் - சீன துாதர்

Home

shadow

                       காஷ்மீர் தற்கொலைப் படை தாக்குதலில் தொடர்புடைய மசூத் அஸாருக்கு தடை விதிப்பது தொடர்பான விவகாரத்தில், விரைவில் தீர்வு காணப்படும், என, இந்தியாவுக்கான சீன துாதர், லுவோ சஹுயி தெரிவித்துள்ளார்


ஜம்மு - காஷ்மீரின், புல்வாமா மாவட்டத்தில், ஜெய்ஷ் - ஏ - முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலை படை தாக்குதலில் துணை ராணுவப்படை வீரர்கள் 44 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு காரணமான, ஜெய்ஷ் - ஏ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாருக்கு தடை விதிக்கவும், அவனை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கவும், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் முடிவு செய்தது. இதற்கு, இந்தியா அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள், ஆதரவு தெரிவித்தன. இந்நிலையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்துக்கு, சீனா முட்டுக் கட்டை போட்டது. இதற்கு, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்ததோடு, எச்சரிக்கையும் விடுத்தன. இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த சீன துாதர், லுவோ சஹுயி, மசூத் அஸாருக்கு தடை விதிக்கும் விவகாரத்தில், ஒரு சில காரணங்களுக்காக, சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளதாகவும் இது பற்றி தொடர்ந்து ஆலோசனை நடத்த போதிய அவகாசம் உள்ளதால் இதில் விரைவில் தீர்வு காணப்படும் என, உறுதியாக நம்புவதாக அவர் தெரிவித்தார்.  

இது தொடர்பான செய்திகள் :