மத்திய அரசு, தமிழக அரசு, உலக வங்கி ஆகியவை இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது

Home

shadow

தமிழக நீர்ப்பாசன திட்டங்கள் நவீனமயமாக்கலுக்காக உலக வங்கி 2 ஆயிரத்து 35 கோ டி ரூபாய் கடன் வழங்குகிறது. இதற்காக மத்திய அரசு, தமிழக அரசு, உலக வங்கி ஆகியவை இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த திட்டத்தின்படி, தமிழகத்தில் சுமார் 4,800 நீர்ப்பாசன குளங்கள், 477 தடுப்பணைகள் அதிக நீரை தேக்கி வைக்கும் வகையில் மறுசீரமைக்கப்பட்டு நவீனப்படுத்தப்படும். இதனால், தமிழகத்தில் உள்ள சுமார் 5 லட்சம் விவசாயிகள் பலன் அடைவார்கள் எனக் கூறப்படுகிறது. தற்போது பகுதி அளவு நீர்ப்பாசனம் நடந்து வரும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள், இத்திட்டத்தால், முழுஅளவில் நீர்ப்பாசன வசதியைப் பெறும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :