மார்ச் மாதம் நடக்க உள்ள வாக்குப்பதிவைப் புறக்கணிக்குமாறு தனது ஆதரவாளர்களை நவால்னி கேட்டுக்கொண்டுள்ளார்.

Home

shadow

அடுத்த ரஷ்ய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 2018 ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் எந்த கட்சியையும் சாராமல் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடப்போவதாக தற்போதைய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். சிவில் இனிஷ்யேடிவ் கட்சியின் சார்பில், பத்திரிக்கையாளரும் தொலைக்காட்சி பிரபலமுமான கெசியா சோபோக் போட்டியிடுவார் என சென்ற வாரம் அறிவிக்கப்பட்டது. ரஷ்யாவின் கம்யூனிஸ்ட் கட்சி பவெல் க்ருடினினை தனது வேட்பாளராக அறிவித்துள்ளது. இந்நிலையில் எதிர்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால் அதிபர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். குற்றவியல் தண்டனைக்கு உள்ளானவர் என்ற காரணம் காட்டி ரஷ்யாவின் மத்திய தேர்தல் ஆணையம் அவருடைய வேட்பு மனுவை ஏற்கவில்லை. ரஷ்ய சட்டப்படி குற்றவியல் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் 10 வருடங்கள் போட்டியிட முடியாது என்பதனை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

தேர்தல ஆணையத்தின் முடிவை தொடர்ந்து, மார்ச் 2018 ரஷ்ய அதிபர் தேர்தலை புறகணிக்க வேண்டும் என அலெக்ஸி நவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். மோசடி புகார் காரணமாக தனக்கு விதிக்கப்பட்ட குற்றவியல் தண்டனை, அரசியல் உள்நோக்கம் உடையது எனவும் கூறியுள்ளார். தன்னுடைய வெற்றிக்கு சிறிதும் அச்சுறுத்தல் ஏற்படும் எனின் அந்த நபரை தேர்தலில் போட்டியிட அதிபர் புடின் அனுமதிக்க மாட்டார் எனவும் நவால் குற்றம்சாட்டினார்.

தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து நவால் மேல்முறையீடு செய்வார் என அவரின் தேர்தல் பிரச்சார அதிகாரி தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :