முன்னாள் ஃபார்முலா-ஒன் கார் பந்தய வீரர் உடல்நலக்குறைவால் மறைவு

Home

shadow

ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லாடா மூன்று முறை ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் சாம்பியன் பட்டத்தை வென்றவர். 

1975 ஆண்டு ஃபார்முலா ஒன் கார் பந்தையத்தில் சாம்பியன் பட்டம் வென்ற இவர் 1976-ஆம் ஆண்டு விபத்திற்கு உள்ளானார். விபத்துக்கு பின்  அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தவர், அதிலிருந்து  மீண்டு வந்து மீண்டும் ஃபார்முலா ஒன் கார் பந்தய போட்டிகளில் பங்கேற்று 1977, 1984 ஆகிய ஆண்டுகளில் ஃபார்முலா ஒன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 70 வயதிகாக்கும் இவர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இவர் இன்று காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவர் மறைவு கார் பந்தய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :