முன்னாள் காதலியை உளவு பார்க்க சென்று ஆபத்தில் சிக்கிக்கொண்ட நபர்

Home

shadow

              முன்னாள் காதலியை உளவு பார்க்க சென்று ஆபத்தில் சிக்கிக்கொண்ட நபர்

             மெக்சிகோ நாட்டில் 50- வயது  நபர் ஒருவர், தன் முன்னாள் காதலியை உளவு பார்க்க சுரங்கம் தோண்டினார். வீட்டின் அருகில், சத்தம் வருவதை அறிந்த அந்தப் பெண், பூனை எழுப்பும் சப்தமாக இருக்கலாம் என எண்ணி கவனிக்காமல் விட்டுவிட்டார். தொடர்ந்து சத்தம் அதிகமாக கேட்க , அங்கு சென்று பார்த்த அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. தமது முன்னாள் காதலர் சுரங்கத்தில் இருந்ததை கண்டு காவல்துறைக்கு அவர் தகவல்  தெரிவித்தார். மயங்கிய நிலையில் சுரங்கத்தில் இருந்த அந்த நபரை காவல்துறையினர் மீட்டனர். விசாரணையில்,  14 ஆண்டுகளுக்கு முன் அந்நபரை அப்பெண் பிரிந்ததாக தெரியவந்தது. இந்த சம்பவம் மெக்சிகோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . 

இது தொடர்பான செய்திகள் :