மூன்று ஆண்டுக்கு 315 கோடி இழப்பீடு..... சர்ச்சையை கிளப்பிய கூகுள் நிறுவனத்தின் சம்மதம்....

Home

shadow

கூகுள் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்ட, இந்தியரான, அமித் சிங்காலுக்கு, 315 கோடி ரூபாய் இழப்பீடு அளிக்க, அந்த நிறுவனம் சம்மதித்திருந்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், ஜான்சியை சேர்ந்த அமித் சிங்கால் அமெரிக்காவைச் சேர்ந்த, பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, கூகுளில், மூத்த துணை தலைவராக, 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். அலுவலக வேலையாக வெளியூர் சென்றபோது, அமித் சிங்கால், தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக, அந்நிறுவனத்தை சேர்ந்த பெண் ஊழியர் புகார் அளித்தார். இது தொடர்பாக நடந்த விசாரணையில், அமித் சிங்காலின் குற்றம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரை பணியில் இருந்து ராஜினாமா செய்யும்படி, 2016ல், கூகுள் நிர்வாகம் வலியுறுத்தியது. இதையடுத்து அவர், தன் பதவியை ராஜினாமா செய்தார். 'நிறுவனத்தில் மிக முக்கிய பொறுப்பு வகித்ததால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, வேறு நிறுவனத்தில் பணியில் சேரக் கூடாது' என, அமித் சிங்காலுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த 3 ஆண்டுகளுக்கு அவருக்கு இழப்பீடு வழங்கவும்,கூகுள் நிறுவனம் ஒப்பு கொண்டது. இந்த இழப்பீடு தொகை குறித்த விபரம் ரகசியமாக வைக்கப்பட்டது.இதையடுத்து, 'ஒழுங்கு நடவடிக்கையின் அடிப்படையில், நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவருக்கு, இழப்பீடு வழங்குவது தவறு' என, கூகுள் நிறுவன பங்குதாரர்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, அமித் சிங்காலுக்கு, மூன்று ஆண்டுகளுக்கான இழப் பீடாக, 315 கோடி ரூபாய் வழங்க, கூகுள் நிறுவனம் சம்மதித்தது தெரியவந்தது இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பான செய்திகள் :