மெக்சிகோவில் தொடர் கனமழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Home

shadow

       மெக்சிகோவில் தொடர் கனமழை  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

      மெக்சிகோவில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

       மெக்சிகோவில் மடெகுவாலா, சான் லூயிஸ் போடாஸி பகுதிகளில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. மேலும் சாலையோரம்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.

       வெள்ளப் பெருக்கு காரணமாக சான் லூயிஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் இருளில் மூழ்கின.தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்ப்படும் அபாயம் உள்ளதால் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பான செய்திகள் :