மெக்ஸிகோ நாட்டில் உள்ள அரிய வகை மண் ஆமை

Home

shadow


 

       மெக்ஸிகோ நாட்டில் உள்ள அரிய வகை மண் ஆமை இனம், அதிகரித்து வரும் நகர்ப்புற வளர்ச்சியால் அழிவின் விளிம்பில் உள்ளது.

 

மெக்ஸிகோ நாட்டில் உள்ள ப்யூரடோ வல்லார்டா என்ற இடத்தில் வல்லார்டா மண் ஆமை என்ற புதிய இன ஆமையை கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன் உள்ளூர் மக்கள் கண்டறிந்தனர். ஆனால் அறிவியல் ஆய்வாளர்கள், இதனை புதிய இனம் என சென்ற மாதம் வரை அங்கீகரிக்கவில்லை. மற்ற பெரிய ஆமைகளின் குட்டியாக இவை இருக்கலாம் எனக் கருதினர். ஆனால், இந்த ஆமை இனம் பத்து சென்டிமீட்டருக்கு மேல் வளராது என்பதை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள், ஐந்து ஆண்டு ஆய்வுக்குப் பின் இதனை ஒரு புது இனம் என சென்ற மாதம் தான் அங்கீகரித்தனர். இவை பெரும்பாலும் ஆறு ஓடை உள்ளிட்ட நீர்நிலைகளில் வாழும் தன்மை கொண்டதால் இவற்றின் கால்கள் தண்ணீரில் நீந்துவதற்கு எதுவாக வலை பின்னப்பட்டது போல காணப்படுகின்றன. அதிகரித்து வரும் நகர்ப்புற வளர்ச்சியால் இந்த ஆமைகள் அழிவின் விளிம்பில் உள்ளதாக குறிப்பிட்டுள்ள விஞ்ஞானிகள், இந்த ஆமைகளை அழிந்து வரும் விலங்குகள் பட்டியலில் சேர்த்து, பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :