மொசாம்பிக் நாட்டை தாக்கிய இடாய் புயலில் சிக்கி ஆயிரம் பேர் உயிரிழந்து இருக்கலாம் என அதிபர் பிலிப்பே நியூசி தெரிவித்துள்ளார்

Home

shadow

         மொசாம்பிக் நாட்டை தாக்கிய இடாய் புயலில் சிக்கி ஆயிரம் பேர் உயிரிழந்து இருக்கலாம் என அந்நாட்டு அதிபர் பிலிப்பே நியூசி தெரிவித்துள்ளார்.


ஆப்பிரிக்க நாடுகளான மொசாம்பிக், மலாவி மற்றும் ஜிம்பாப்வேயை கடந்த வெள்ளி கிழமை இடாய் எனும் புயல் தாக்கியது. இதில் மொசாம்பிக் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. புங்வே மற்றும் புசி ஆற்றங்கரையோரப் பகுதிகள் இந்த புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆறுகளின் பல்வேறு பகுதிகளில் மனித உடல்கள் மிதப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக அந்நாட்டு அதிபர் பிலிப்பே நியூசி தெரிவித்துள்ளார். தற்போது வரை 215 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்க கூடும் எனவும் அவர் கூறினார். மொசாம்பிக் வரலாற்றிலேயே மிகவும் மோசமான புஅயல் இதுவெனவும், மனித உயிர்களை காப்பாற்றுவதே தற்போது தங்களின் நோக்கம் என மொசாம்பிக் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :