மொரீஷீயஸ் அதிபர் ராஜினாமா

Home

shadow


நிதி மோசடியில் சிக்கிய மொரீஷீயஸ் அதிபர் அமினாஹ் குரிப் பாஹிம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மொரீஷியஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக அமினாஹ் குரிப் பாஹிம் கடந்த 2015ஆம் ஆண்டு பதவியேற்றார். அதிபராக இருந்த அமினாஹ் குரிப், அரசு சாரா அமைப்பு சார்பில் வழங்கப்பட்ட வங்கி அட்டையை முறைகேடாக பயன்படுத்தி நிதி மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. இந்நிலையில் அமினாஹ் குரிப் பாஹிம் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அதிபர் பாஹிம் மீதான மோசடி உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் பிரவீந்த் ஜக்நாத் தெரிவித்துள்ளார். நாட்டின் நலன் கருதியே அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறினார். வரும் 15ஆம் தேதி மொரிஷீயஸ் நாட்டின் 50வது குடியரசு தின விழா கொண்டாட உள்ள நிலையில் அதிபர் தனது ராஜினாமா செய்துள்ளார்

இது தொடர்பான செய்திகள் :