மோட்டார் பைக்குகளை ஓட்ட தீவிர பயிற்சி எடுத்துவரும் அரேபிய பெண்கள்

Home

shadow


 சவூதி அரேபியாவில் பெண்கள் இருசக்கர மோட்டார் வாகனங்களை ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை விரைவில் ரத்து செய்யப்படுவதை ஒட்டி, அங்கு ஏராளமான பெண்கள் மோட்டார் பைக் ஓட்டுவதற்கு ஆர்வத்துடன் பயிற்சி எடுத்து வருகின்றனர்.

 

பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துவரும் இஸ்லாமிய நாடான சவூதி அரேபியாவில் அண்மைக்காலமாக சுதந்திரக் காற்று வீசத் தொடங்கியுள்ளது. பொது மைதானங்களில் ஆண்களோடு பெண்களும் சரிநகர் சமானமாய் அமர்ந்து விளையாட்டுகளை ரசிக்க அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சாலைகளில் இருசக்கர மோட்டார் வாகனங்களை ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, வரும் 24-ஆம் தேதி முதல் அகற்றப்படுகிறது. சவூதி அரேபியாவில், சாலைகளில் சக ஆண்களுக்கு இணையாக பெண்களும் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்ல இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், பல பெண்கள் மோட்டார் பைக்குகளை ஓட்ட தீவிர பயிற்சி எடுத்து வருகின்றனர். மோட்டார் வாகனப் பயிற்சி மைய மைதானத்தில், ஜீன்ஸும், டிஷர்ட்டும் அணிந்தபடி அரேபியப் பெண்கள் மோட்டார் பைக்குகளை ஓட்டி, பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். பைக் ஓட்டும் அனுபவத்தை ஒற்றை வரியில் சொன்னால், விடுதலை என்று கூறும் சவூதி அரேபியப் பெண்கள், சாலைகளில் மோட்டார் பைக் ஓட்டிச் செல்லும் நாட்களை, ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான செய்திகள் :